தந்தை பெரியார்
தமிழர்களின் முக்கிய கவனத்திற்கு…
பார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ சாமி என்றோ மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்.
இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி, எந்தப் பாதகத்தைச் செய்தாவது – அதாவது யாரைக் கொன்றாவது, மக்களை எல்லாம் காலிப்பயல்களாகச் செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து இக்காரியத்தில் ஒவ்வொரு பார்ப்பானும் தங்களாலான கைங்கரியத்தைச் செய்து பார்த்துவிடத் துணிந்து விட்டார்கள்.
முதலமைச்சரைப் பாராட்டித் தீர்மானம்
இதற்கு ஆதாரம் இந்நாட்டில் எங்கு பார்த்தாலும் நடந்துவரும் அயோக்கி யத்தனங்களும் காலித்தனங்களுமே போதுமானவையாகும். இன்னும் பல பெரிய கேடுகள் ஏற்படலாம். இன்றைய திராவிட முன்னேற்ற (பகுத்தறிவு)க் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் வரை (அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது) ஓயாமல் பல கேடுகளைச் செய்துதான் வரு வார்கள், மக்கள் சகித்துக் கொண்டுதான் தீர வேண்டும். ஏன் என்றால் பார்ப்பான் ஒழிவது என்பது இலேசான காரியம் அல்ல.
எதை எதையோ சொல்லி எதை எதையோ செய்து எப்படியோ போகட்டும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் போட்டு அரசாங்க காரியங்களை ஆதரித்துப் பாராட்டி தீர்மானங்கள் போட்டு அத்தீர்மானங் களை முதலமைச்சருக்கும் மற்ற இலாகா அமைச்சர்களுக்கும் அனுப்பிய வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்.
சூத்திரர்களாக இருக்கத்தான் தமிழர் களுக்கு ஆசையா?
பார்ப்பனர்கள் தினந்தோறும் தங்கள் பத்திரிகைகளில் யார் யாரோ அநாம தேயங்கள் பேரால் பல கடிதங்கள் வெளி யிட்டு வருகிறார்கள். நாம் அப்படிச் செய்யாவிட்டாலும் பொதுக் கூட்டங்கள் போட்டுப் பேசித் தீர்மானங்கள் செய்து அனுப்ப வேண்டாமா? இப்படிச் செய்வது ஒரு வகையில் பார்ப்பனர் யோக்கியதையை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாகும்.
பொதுவாக நம் தமிழ் மக்கள் தாங்கள் என்றும் சூத்திரர்களாக, கீழ்ஜாதி மக்களாக இருக்க ஆசைப் படுகிறார்களா? இல்லா விட்டால் அதை மாற்ற தமிழர்கள் செய்யும், செய்யப்போகும் காரியம் என்ன என்று கேட்கிறேன். தாங்களாகச் செய்யா விட்டாலும் ஆட்சியையாவது ஆதரிக்க வேண்டாமா?
ஒவ்வொரு தமிழனும் தன் வீட்டில் உள்ள கடவுள் – மத சம்பந்தமான படங்களை எடுத்து எறியவேண்டும், எடுத்து எறிந்து விட்டு தகவல் கொடுக்க வேண்டும். பொதுக் கூட்டத்தில் காட்டி கிழித்து எறிய வேண்டும். இவற்றாலும் இப்படிப்பட்ட காரியங்களாலும் தான் தமிழர் இழிவு நீங்கும்.
(‘விடுதலை’, 11.4.1973)
அண்ணா எழுதிய துணைத் தலையங்கம்
ரயில்வே ஸ்டேசன்களில் உள்ள சிற்றுண்டி, சாப்பாட்டு விடுதிகளில் சூத்திரர், பிராமணாள் என்று தொங்கவிடப்பட்டிருக்கும் சின்னங்களை சர்க்கார் நீக்கும்படி செய்வது அவ்வளவு பெரிய காரியமாய் விடாது. ரயில்வே கம்பெனிக்காரரே இதைச் செய்து விடலாம். இதற்கு வீணாக சாக்குப் போக்குகள் சொல்லிக் காலங் கடத்துவது தமிழர்களை அறைகூவி அழைப்பதற்கே ஒப்பாகும்.
ரயில்வே ஸ்டேசன் பொதுஜனங்கள் புழங்கும் இடம். அதில் ஜாதி வித்தியாசத்தைக் காட்டும் சின்னங்கள் இருப்பது ஒருநாளும் நேர்மையாகாது. நியாயமாகாது. யாரும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதை எவ்வாறு இங்கிலாந்திலுள்ள கம்பெனி டைரக்டர்கள் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நமக்கு விளங்கவில்லை. உண்மை நிலை எடுத்து விளக்கப்படுமேயானால் ஒரு நொடிப் பொழுதில் அதை அகற்றி விடுவார்கள் என்றே நம்புகின்றோம். உண்மை நிலையை விளக்க திராவிடத் தலைவர்கள் ஒன்றுபடுவார்களாக!
தலைவர்கள் ஒன்றுபட்டு பெரியார் தலைமையின் கீழ் கிளர்ச்சி ஆரம்பிப்பார்களேயானால், வெற்றி கை மேல் இருக்கிறதென்று இன்றே தைரியமாகக் கூறுவோம். இந்நிலையை இப்படியே விட்டுக் கொண்டு போனால், நம்மை நாமே இழிவுபடுத்தி. பணத்தைக் கொடுத்து ஒரு கூட்டத்தாரை வளர்க்கிறோம். என்பதோடு, நம்மவர்கள் சிற்றுண்டி சமையல் முதலியன செய்வதில், சிறிதும் அக்கறையின்றி – கவலையின்றி பழக்கத்திற்குக் கொண்டு வராமல், ஆரிய வர்க்கத்தினருக்கே ஏகபோக உரிமையாக்கி விடுகிறோம் என்பதையும் அதேசமயத்தில் எச்சரிக்கை செய்கிறோம். நாம் இவ்வாறு கவலையீனமாயிருந்து வருவதினால்தான் இறைச்சியையும். மதுபானத்தையும் உண்டும், பருகியும் வந்த கூட்டம் அறுசுவை உண்டியுடன் அமுதளித்து வந்தவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன தெரியும்?” நீங்கள் எங்களை என்ன பேசினாலும், எங்கள் கையைத் தானே (பணத்தையல்ல: பக்குவத்தை) தினந்தோறும் எதிர்பார்க்கிறீர்கள்” என்று ஆணவமாக. திமிராகக் கூறி வரலாயிற்று.
எனவே. சுயமதிப்பில் – சுயமரியாதையில் கடுகளவாவது கருத்திருக்கும் ஒவ்வொருவரும் இவ்விழிவைப் போக்க இன்றே முன்வருவார்கள்.
(- அண்ணா எழுதிய
துணைத் தலையங்கம். ‘குடிஅரசு’ – 28.07.1940)