சென்னை, டிச.27- தென் மாவட் டங்களில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி நடை பெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித் துள்ளார்.
எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்புப் பயிற்சி முகாம் 2023அய் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி (டிச.26) தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென் னையிலும் மழையால் பாதிக்கப் பட்ட மாணவர்களின் சான்றி தழ்கள் வழங்க ஆன்லைன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா கவும், மழையால் நனைந்த புத்த கங்கள் மட்டுமில்லாமல் சீருடை களையும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் சொன்னதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி னார்.
மேலும் பேசிய அவர், “தென் மாவட்டங்களில் உள்ள பள்ளியில் அரையாண்டுத் தேர்வில் 4 தேர்வு கள் நடத்த முடியாமல் போனது. அந்த தேர்வுகள் ஜனவரி 2இல் பள்ளி தொடங்கும் போது தேர்வு நடத்தத் திட்டமிட்டு உள்ளது.
திருநெல்வேலியில் ராதாபுரம், நெல்லை டவுன், நாங்குநேரியில் சில இடங்களில் தண்ணீர் வடிந் தாலும் தூத்துக்குடியில் தண்ணீர் வடியவில்லை.
அதனால், 4 ஜே.டி.க்கள் நியமிக் கப்பட்டு அவர்களுடன் ஆலோ சனை நடைபெற்றது. திருநெல் வேலியில் 10 பள்ளிகள் நிறையச் சேதம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் சேதம் அடைந்த பள்ளிகளைச் சரிசெய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு மாவட்டத்திலும் பள் ளிகள் திறக்கப்படுவதற்கு முன் பாகவே உரியப் பாதுகாப்பு இருக் கும் பட்சத்தில் மட்டுமே அது அன்றைக்குத் திறக்கப்படும்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை எழுத முடியாது; தள்ளி வைக்க வேண்டும் என பெரிய அளவிற்குக் கோரிக்கை வரவில்லை. எனினும், ஜனவரி 7இல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வைத் தள்ளி வைப்பது குறித்து, முதலமைச்சரின் ஆலோசனை கேட் கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக ளில் ஜாதிய தீண்டாமை இருக் கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு செய் வோம். அது போன்ற தீண்டாமை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள் ளிகளில் இல்லை. இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு கணினி வழியில் நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், 41,000 பேர் விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பழைய முறையில் நடத் துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்தார்.