26.12.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
• பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயரை பரிந்துரை செய்ததில் தனக்கு அதிருப்தி இல்லை; பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்பது மட்டுமே தன் விருப்பம் என்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
• மாநிலங்களவை தலைவர் தன்னை நேரில் சந்திக்க விடுத்த அழைப்பை நிராகரித்தார் மல்லிகார்ஜூன கார்கே.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• மாயாவதி தலைமையிலான பி.எஸ்.பி. கட்சியின் ஒரு பிரிவினர் இந்தியா கூட்டணியில் சேர வேண்டும்; இல்லை யென்றால் கட்சி பெரும் சரிவை மேற்கொள்ளும் என எச்சரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• குற்றவியல் சட்டத்தின் சரியான செயல்முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் “சுதந்திரம்” மற்றும் “தனிப்பட்ட சுதந்திரம்” ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளன என ப.சிதம்பரம் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
• இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என அறிவிக்க தேவையில்லை என சரத் பவார் பேட்டி.
.- குடந்தை கருணா