எல்லாம் பிசினஸ்
செய்தி: ராமரை 5 கோடி மக்கள் தரிசிக்க பாஜக ஏற்பாடு.
சிந்தனை: அப்படி என்றால் ராமனை தரிசிக்க கட்டணம் வசூலிக்க இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது – எல்லாம் பிசினஸ்.
ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்
செய்தி: வெள்ள மீட்பு பணிகளை சரிவர மேற்கொள்ள வில்லை.
– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
சிந்தனை: தமிழிசை சவுந்தரராஜன் என்பவர் இருக் கிறார் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கிடப்பில் போடுவதற்கு
செய்தி: மூன்று குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
சிந்தனை: குடியரசுத் தலைவர் என்ன ஆளுநர் ரவியா கிடப்பில் போடுவதற்கு?