டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
♦ மோடி ஆட்சியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது என தெலங்கானா நீர்வளத் துறை அமைச்சர் உத்தம் காட்டம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ ‘அப்பன்’ வீட்டுப் பணம் எனும் வார்த்தை, அவதூறு வார்த்தை அல்ல – உதயநிதி
தி டெலிகிராப்:
♦ அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் கடந்த 15ஆம் தேதி நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் பொருளா தாரம் வளர்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது என கூறினார்.
♦ உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு தரப்பட்ட ரூ.50,000 வெகு மதியை பெறவில்லை. மாறாக தங்களுக்கு நிரந்தர வேலை, வீடு வேண்டும் என உத்தரகாண்ட் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த அழைப்பை ஏற்க சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறுத்துவிட்டார். அழைப்பாளர்களில் ஒருவரான சிபிஅய் தலைவர் டி ராஜாவும் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை.
♦ மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியே தேசியப் பேரிடர் என்பதால், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை மோடி அரசு தனியாகப் பார்க்கவில்லையோ என சமூக ஊடகங்களில் வந்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி அமைச்சர் உதய நிதி பேட்டி.
– குடந்தை கருணா