திருச்சி, டிச. 24 திருச்சி மாவட்டம், கீழவாளாடி கிராமத்தில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு 65 ஆம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம், பெரியார் வீர விளையாட்டு பயிற்சிகள் துவக்க விழா மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நினைவு கல்வெட்டு திறப்பு விழா 22.12.2023 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மு.செல்வி வரவேற்புரையாற்றி னார். வீ.அன்புராஜா தலைமை வகித்தார். லால்குடி மாவட்டத்தலைவர்தே.வால்டேர், மாவட்ட செயலா ளர்அங்கமுத்து,துறையூர்மாவட்டத்தலைவர்மணி வண்ணன், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார். ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்மணி துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து தலைமைக்கழக சொற்பொழிவாளர் அதிரடி க.அன் பழகன், பேராசிரியர் சூசை உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு கீழவாளாடி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு (சட்டம் எரிப்பு) வீரர்களுக்கு சிறப்பு செய்தும், ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நினைவு கல்வெட்டினை திறந்து வைத்தும், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சியும் மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள் வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜாதி ஒழிப்பு வீரர்கள் இந்த இயக்கத்திற்கு அளித்த தொண்டு, தியாகம் அவ்வளவு பெரியது. தந்தை பெரியார் அறிவித்த முக்கியமான போராட்டங்களில் ஒன்று ஜாதி ஒழிப்புப் போராட்டம். பத்தாயிரத்துக்கும் மேற் பட்டோர் கைதான சூழ்நிலையில் லால்குடி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறை சென்றார்கள் என்கிற வரலாற்று பதிவு மிகவும் முக்கியமானது. இந்தப் போராட்டம் சாதாரணமானது அல்ல – இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தை பற்றி அடுத்த தலைமுறைக்கும் இந்த தியாகத்தை பற்றி கூற வேண்டும். இந்த ஊர் அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஊர். ஆசிரியர் கூறும்போது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரி விக்கும்போது யாரையும் விட்டுவிடக்கூடாது அனைவரையும் மிக கவனமாக பட்டியலிட்டு அவர் களை பெருமைப்படுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்த தியாகம்தான் நீங்கள் எல்லாம் இங்கு இருக்கிறீர்கள் என்றார். இன்றைக்கும் எந்தப் போராட்டம் என்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் எப்பொழுதும் கலந்து கொள்வார்கள் அதில் பின்வாங்க மாட்டார்கள் திராவிடக் கழகத்தின் போராட்டம் என்பது அதன் வெற்றி தாமதமாக இருக்குமே தவிர என்றைக்கும் அது தோற்றது கிடையாது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள். அதுதான் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தந்தை பெரியாரின் போராட்டம் இந்த சமூகத்தின் மாற்றத்திற்கான போராட்டம் இதில் பங்கெடுத்த சிறை சென்று இறந்து போன தோழர்களுக்கும், சட்ட எரிப்பு வீரர்களுக்கும் எனது வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் மற்ற தோழர்களுக்கும் திராவிடக் கழகத்தின் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
சட்டம் எரிப்பு பேராட்ட வீரர்களுக்கு சிறப்பு
இந்நிகழ்ச்சியில் கீழவாளாடியில் வசிக்கும் வீ.கோவிந்தன், ப.கணேசன், பெ.அங்கமுத்து, ச.மைக் கேல் தொ.பிலவேந்திரன் ஆகியோருக்கு பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.
பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செய லாளர் பனிமலர் செல்வன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இன்பராஜ், ஓவியர் தமிழரசன், கீழவாளாடி இளைஞரணி தலைவர் விக்னேஷ், கிள்ளிவளவன், முருகானந்தம், பரமானந்தன், மீனா, வள்ளியம்மாள் சிங்காரம், வசந்தகுமாரி வீரமணி, மேனாள் மாவட்ட தலைவர் ச.கணேசன், பாச்சூர் அசோகன், திருவெறும்பூர் இளங்கோவன், காட்டூர் சங்கிலிமுத்து, மண்ணச்சநல்லூர் கு.க.பெரியசாமி, பாலச்சந்திரன், வெ.சித்தார்த்தன், துறையூர் சண் முகம், பிச்சைமணி, லால்குடி மணிவாசகம், கல் பாக்கம் இராமச்சந்திரன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இளைஞரணி செ யலாளர் பனிமலர் செல்வன் நன்றி கூறினார்.