சென்னை,அக்.21- தேசிய மக் கள் தொகை கணக்கெடுப் புடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931 ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட் டது. அதன் பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந் தது. இதன் காரணமாக மீண்டும் ஜாதிவாரி கணக் கெடுப்பை நடத்தவேண் டும் என பல்வேறு தரப் பினர் கோரிக்கை வைத் தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் சில நாட்க ளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286%) பேர் பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்.
21 லட்சத்து 99 ஆயி ரத்து 361 பேர் (1.6824%) பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர். இந்துக் களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் என்பதும் தெரிய வந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளது. ஆனால் இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பை பாஜகவில் பலர் எதிர்த்து வருகின்றனர்.
இந்த முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்துவோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநி லங்களில் விரைவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத் தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெ டுப்புடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக் கப்படக்கூடிய பிரிவினருக் குக் கொண்டு செல்வதற் கும், வலிமையான, அனை வரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கு வதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெ டுப்புடன், விரிவானதொரு ஜாதிவாரிக் கணக்கெ டுப்பை இணைத்து நடத் துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியா கத் தொடங்கிட வேண் டும்.
2021 ஆம் ஆண்டு மக் கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பில், ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும். மாநில அள வில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக் கெடுப்பு, முக்கியமான ஜாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற் கொள்ளப்பட்டால் மட் டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலை நாட்டிட இயலும். சம மான மற்றும் உள்ளடக் கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்” என்று அந்த கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.