திருத்துறைப்பூண்டி
தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 10 மணிக்கு காமராஜர் சிலையிலிருந்து அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்படும். அதில் நமது கழக தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
திருவாரூர்
தந்தை பெரியார் 50-ஆம் ஆண்டு நினைவு நாளான 24.12.2023 ஞாயிறு காலை 9.00 மணிக்கு திருவாரூர், கீழ வீதி காமராஜர் சிலையிலிருந்து மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அடைந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்
Leave a Comment