சென்னை, அக். 21- சிறீபகவான் மஹா வீர் விக்லாங் சஹாயதா சமிதி (பிஎம்விஎஸ்எஸ்) சுரானா & சுரானா பொது அறக்கட்டளையுடன் இணைந்து DOW கெமிக்கல் இன்டர்நேஷனல் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற் கான CSR செயல்பாட்டை ஏற் பாடு செய்தது. “DOW-BMVSS சென்னை முகாம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இது ஒரு ஜெய்ப்பூர் ஃபூட் முகாம் ஆகும்.
மாற்றுத்திறனாளி களுக்கான செயற்கை கால்கள்/ கைகள், காலிப்பர்கள் மற்றும் பிற உதவி களை விலையின்றி வழங்குவதற்காக 2023 செப்டம்பர் 22 முதல் 24 வரை வேப்பேரியில் உள்ள பெரியார் திட லில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அடையாறு ஆனந்த பவன் சுவீட்ஸின் எம்.டி., கே.டி. சீனி வாச ராஜா மற்றும் செஷல்ஸ் குடியர சின் தென்னிந்தியாவுக் கான கவு ரவ கான்சல் ஜெனரல் எம்.சேஷா சாய் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். சுரானா & சுரானா பொது அறக்கட்டளையின் CEO டாக்டர் வினோத் சுரானா இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார். செப் டம் பர் 22 ஆம் தேதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இம்முகாமிற்கு சிறப்பு வருகை புரிந்து நிகழ்வுகளை பார்வையிட்டு வாழ்த்தினார்.
செப்டம்பர் 22 முதல் 24 வரையிலான 3 நாட்களில் 420+ செயற்கை உறுப்புகள் (கால்கள்/ கைகள்) வழங்கப்பட்டன மற் றும் 165+ பதிவுகளும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும். மொத்தத்தில், உதவி தேவைப்பட்ட 600+ மாற் றுத் திறனாளிகள் இந்த முகாமில் தங்களை பதிவு செய்து கொண் டனர். மேலும், காஞ்சிபுரம் மாவட் டத்தில் இருந்து மாற்றுத்திறனாளி கள் 76 பேர் கொண்ட குழுவை வர வழைக்க போக்குவரத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டன. கூடுதலாக, சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல் கள் மற்றும் கையால் இயக்கும் முச் சக்கர வண்டிகள் போன்ற உபகர ணங்களும் தனிநபரின் பரிசோத னைக்கேற்ப வழங்கப்பட்டன. ஜெய்ப்பூர் நிபுணர் குழுவின் உதவியோடு BMVSS-இன் /தென் னிந்திய நிபுணர் குழு தனிநபரின் உடல்நிலையை ஆராய்ந்து, அவர் களின் தேவைகளுக்கு ஏற்ப தனித் துவமாக வடிவமைக்கப் பட்ட உறுப்புகளை (கை/ கால் கள்) பொருத்துவதற்கு வழிவகை செய் தது.
ஜெய்ப்பூர் ஃபூட் முகாம் சுரானா & சுரானா பொது அறக் கட்டளையின் முதன்மை செயல் பாடுகளில் ஒன்றாகும். BMVSS-60T தென்னிந்திய மய் யத்தை தலைமை தாங்கி செயல் படுத்துவது சுரானா & சுரானா பொது அறக்கட்டளை ஆகும். 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் மாற்றுத் திறனாளி களுக்கு செயற்கை கை/கால் களை விலையின்றி வழங்க அறக் கட் டளை இலக்கு வைத்துள்ளது. 2009ஆம் ஆண்டிற்கான 50 உல கில் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக டைம் இதழால் ஜெய்ப் பூர் முழங்கால் பாராட்டப்பட் டது என்பது குறிப்பிடத்தக்கது.