திருவள்ளூர் மாவட்ட திராவிட முன் னேற்றக் கழக மேனாள் செயலாளரும், மேனாள் சட்டப் பேரவை உறுப் பினரும், இந்நாள் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் உறுப்பினரு மான கொள்கை வீரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்கள் நேற்று இரவு (20.10.2023) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
தோழர் கி.வேணு அவர்கள் சிறந்த கொள்கை வீரர் – திராவிட இயக்கத் தீரர்களில் ஒருவர். ‘மிசா’ காலத்தில் எங்களோடு சென்னை மத்திய சிறைச் சாலையில் இருந்தவர். தி.மு.க.விடம் எப்படி முழு ஈடுபாட்டுடன் இறுதிவரை பணியாற்றி னாரோ, அதே பாசத்துடன் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தையும், நம்மையும் நேசித்தவர்.
அப்பகுதி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்கத் தவறாதவர்.
அவரது இறப்பு, திராவிடர் இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு – அவர் குடும்பத்திற்கு மட்டு மல்ல – அவரை இழந்து வருந்தும் அவரது இயக்க குடும்பத்தினர் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆறுதலையும் மறைந்த வருக்கு நமது வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.10.2023