திருவெறும்பூர், டிச.23- பெல் எல்.சி.எஸ். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி கோரி, திருச்சி பெல் நிறுவனத்தின் 24 ஆவது பிரதான வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரா விட தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் சிறப்புரையாற்றினார்.
திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணி களுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் சுமார் 20 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின் றது. இதனால் தங்களது வாழ்க் கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலா ளர்கள் மிகவும் துன்பப்பட்டு வரு கின்றனர். இவர்கள் தங்களை நிரந் தர தொழிலாளராக நிர்வாகம் பணிய மர்த்த தொடர்ந்து போராடி வருகின் றனர். தற்பொழுது பெல் நிர்வாகம் தங்களை கொத்தடிமைகளாக நடத் தப்பட்டு வருவதை கண்டித்து வேலை நிறுத்த கடிதத்தை 13ஆம் தேதி மாலை பெல் நிர்வாகத்திடம் சொசைட்டி தொழிலாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் வழங்கினர்.
வேலை நிறுத்தத்தில் கொடுத்து ஒரு வார காலமாகியும் இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேச வில்லை என்று நிர்வாகத்தை கண் டித்து 20.12.2023 அன்று மெயின் கேட் முன்பு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நட ராஜன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத் தொழிற்சங்க மாநில நிர்வாகி மு.சேகர் கலந்து கொண்டு பேசுகையில், இங்குள்ள பெல் நிர்வாகம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து தவறி வருகிறது. வேலை நிறுத்த அறிவிக்கை கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் இதுவரை தொழிற் சங்கங்களை அழைத்து எந்தவிதப் பேச்சுவார்த்தையும் நடத்தாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதே வேளையில், சொசைட்டி தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் பாஸ் நான்காண்டுகளுக்கு ஒருமுறை இது நாள் வரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இனி ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றம் செய்யப்பட் டுள்ளது என்பது வன்மையாக கண் டிக்கத்தக்கது.
-இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு தொழிற்சங்க நிர் வாகிகள் முருகேசன், முருகானந்தம், நடராஜன் காமராஜ் செல்வராஜ் பூபதி மலையப்பன் ரமேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்து பேசுகை யில் பெல் சொசைட்டி தொழிலா ளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் மெடிக்கல் வசதி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறி விப்பு கடிதம் பெல் நிர்வாகத்திற்கு கொடுத்தும் நிர்வாக தரப்பிலிருந்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வில்லை இன்னும் 9 நாள்களுக்குள் நல்ல தீர்வு கிடைக்கவில்லை என் றால் வேலை நிறுத்தத்தில் ஈடு படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று பெல் நிர்வாகத்திற்கு எச் சரிக்கை விடுத்தனர். இதில் பல்வேறு சொசைட்டி தொழிற்சங்கங்களில் இருந்து திரளான தொழிலாளர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.