முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக். 21- கொளத் தூருக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.84 கோடியில் அமைக்கப் பட்ட கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5.95 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி னார்.
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (20.1.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.
அப்போது, திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.3.30 கோடியில், அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்தரையுடன் கூடிய கால்பந்து திடலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, திரு.வி.கநகர் 8-ஆவது தெருவில் ரூ. 54.18 லட்சத்தில் பல்வேறு வசதிகளு டன் அமைக்கப்பட்டுள்ள மாந கராட்சி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.
ஜவஹர் நகர் 1ஆ-வது சர்குலர் சாலையில் புதிதாக வடிவமைக் கப்பட்டுள்ள கட்டடத்தில், சிறீ அகஸ்தியர் அறக்கட்டளை சார் பில் கருணாநிதி நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மய்யத்தையும், அக்கட் டடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி யின் தையல் பயிற்சி மய்யத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
பின்னர், கொளத்தூர் ஜவகர் நகரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளி களுக்கு மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை, தையல் இயந்திரம் என 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
திரு.வி.க.நகர் மண்டலம் வி.வி. நகர் 1ஆ-வது தெருவில் நடை பெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.எம் காலனி 27ஆ-வது தெருவில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி மய்யம் மேம்படுத்தும் பணி, ஜவஹர் நகர் 1ஆ-வது வட்ட சாலையில் உள்ள விளையாட்டு மய்தானத்தில் யோகா பயிற்சி மேடை அமைத்தல் உட்பட ரூ.5.95கோடி மதிப்பில் 33 புதிய மேம்பாட்டுபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீரா சாமி, ஆர்.கிரிராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகர் ஊர மைப்பு இயக்குநர் பி.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.