மதராசிப் பார்ப்பனரல்லாதார், உயர்ந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் வைதீகர்களை எதிர்த்து முக்கியமாகப் பார்ப்பனர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வருவதைப் பத்திரிகைகளில் கண்டேன்.
பல தலைமுறை தலைமுறையாக சித்திரவதைப்பட்டதன் பிறகு, இப்போது அவர்கள் இந்த அநீதியையும் பொய்மை யையும் ஒழிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டனர்.
“சாதிக் கொடுமைகளை எதிர்த்து நடத்தப்படும் புரட்சி – ஃப்ரஞ்சு புரட்சியை விட அதிக பயங்கரமாக இருந்தாக வேண்டும்” என்று ஜாதரும் பிரியும் கூறியிருக்கின்றனர்.
இந்தியா இப்போது ஒரு சுதந்திர நாடு. எனவே, இந்நாட்டின் உள்நாட்டு சமூக கெட்ட பழக்க வழக்கங்களை எவ்வகையிலாயினும் நீக்கியாக வேண்டும். இந்தப் பார்ப்பன ஆதிக்கம் எனப்படுவதும், தீண்டாமை என்பதும் உடனடியாக இந்த நாட்டை விட்டு ஒழிக்கப்பட வேண்டும்.
கீழ் ஜாதியார் எனப்படுபவர்கள், மனிதத் தன்மை அடைவதற்கு மாபெரும் தடையாகி வந்துள்ளது இந்த ஜாதி முறை.
இந்த கேட்டை உங்கள் நாட்டிலே யிருந்து ஒழிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக தங்க ளையும் தங்களுடைய சகாக்களையும நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
இத்துறையில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை எல்லாம் தாங்கள் சமாளித்து வெற்றிகொள்ள வேண்டுமென்று நான் வேண்டுகிறேன்.