“சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ் நாட்டில் நிறுவி நிலைநிறுத்தி, பிறவிப் பெருமை, சாதித்தருக்கு ஆகிய கொடுமைகளை எதிர்த்து அடக்கி, சம உரிமை, பொது உடைமைவாதிகளின் தலைவராய்ச் சிறந்த சேவைபுரிந்து வருபவர். அஞ்சாத நெஞ்சமும் மாறாத மன உறுதியும் இயற்கையாயமைந்த வினைத் திறமும் நடைமுறையில் கடைபோகக் கையாண்டு வெற்றியே கண்ட வீரர். பெருமையும் திறனும் பிறவியிலேயே அமைந்த இளகிய உள்ளமும் உடையவர். வஞ்சமறியா மனப்பாங்கும் தஞ்சம் தந்து தாழ்த்தப்படுவோர்க்கு எஞ்சாதுதவும் இயல்பும் உடையவர். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை தமிழ்நாடு நன்கறியுமே.”
– ச.சோமசுந்தர பாரதியார்