தந்தை என்னும் முறை கொண்ட தலைவர் வாழி!
தமிழர் நல வெறி பூண்ட சமரர் வாழி!
சிந்தை குளிர் சீர்திருத்தச் செம்மல் வாழி!
செயல் வீரர் பலர் கொண்ட தீரர் வாழி!
அந்தகம் சூழ் தமிழ் நாட்டை அரட்டி, சீர்த்தி
அறிவகமாய் அமைந்திட்ட அண்ணல் வாழி!
இந்தத் தரை உள்ளமட்டும் இருண்டிடாத
எழில் மிகுந்த ஒளி தந்த எந்தை வாழி!
சங்குகள் நிறமும் மாறி,
சந்தனம் மணமும் மாறி,
செங்கதிர் திசையும் மாறி,
தெங்குநீர் குளிரும் மாறி,
திங்கள் தண் நிலையும் மாறி,
தெவிட்டமு தினிப்பும் மாறி,
சங்கமும் மாறினாலும்
தந்தை சொல் வாழும்; நாளும்.