“ஃபிரான்ஸ் நாட்டில் 1815ஆம் ஆண்டில் அறிஞர் ரூஸோ அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்தது போல் நம் தமிழ் நாட்டின் சுயமரியாதையைக் காக்க உழைக்கும் பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டின் ரூஸோ ஆவார்.
தமிழ்நாட்டில் அவரின் பெயர் எந்த வீட்டிலும் சொந்தப் பெயராகவே உச்சரிக்கப்படுகிறது. அவரது புகழ் ஆந்திரம், மகாராட்டிரம் (பம்பாய்) மத்திய மாகாணங்களிலும் பரவியிருக்கிறது. அவர் தமது முழு சக்தியையும், பாமர மக்களுக்கு உணர்த்துவதிலும், பாமர மக்களின் உணர்ச்சியைக் கிளப்பி விட்டு உழைத்து வருவதே அவர் வெற்றிக்குக் காரணம்.”
– சர். ஏ.ராமசாமி முதலியார்