ஒக்கநாடு மேலையூர், டிச. 22- ஒக்கநாடு மேலையூரில் – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது.
கடந்த 17.12.2023 அன்று ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தகைசால் தமிழர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு காலை 9 மணியிலிருந்து பயனாளர்கள் வருகை தந்து, பெயர் பதிவுசெய்து கொண்டனர். 9.30 மணிக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் வருகை தந்து தங்களது பணியைத் துவங்கினார்கள்.
தந்தை பெரியார் சிலைக்கு மாலை
காலை 10 மணி அளவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான வீ.அன்புராஜ் வருகை தந்தார். அப்போது பொதுமக்களும், தோழர் களும் புடைசூழ அவரை வரவேற்று முழக்கமிட்டனர். பின்னர், தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார்.
நிகழ்வுக்கு பெரியார் மருத்துவக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன் தலைமை வகித்தார். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராரவிச் சந்திரன், மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர கழகத் துணைச் செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க. இணைச்செயலாளர் ஆ.லட்சுமணன் அனைவரையும் வரவேற்றார்.
பொதுச்செயலாளருக்கு ஊராட்சிமன்றம் வழங்கிய வரவேற்பும், நன்றியும்!
கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லட்சு மணனின் தாயார் ஆ.தையலம்மாள் அவர்களின் படத் திறப்புக்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் ஊர் மக்கள் சார்பில், ‘‘எங்கள் ஊருக்கு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தி எம் ஊர் மக்கள் நலமுடன் வாழ்வதற்கு உதவிபுரிய வேண்டும்” என கேட்டுக்கொண்டனர். அந்நிகழ்விலேயே மக்களுக்கான மருத்துவ முகாம் நடத்துவோம் என்று உறுதியளித்ததை நேரில் வருகை தந்து செயல்படுத்திக் கொடுத்த பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை இந்த ஊராட்சி மன்றம் சார்பில் வரவேற்று நன்றி தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் இரா.அன்பரசு, ஒன்றியக் குழு உறுப்பினர் ம.துரைராசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனகவள்ளி திருப்பதி, மேனாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பொன்னம்மாள் ராசப்பன், தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ம.ராசா (எ)ராசரெத்தினம், தி.மு.க. இளைஞரணி க.கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ம.ராசகோபால், ஊராட்சி செயலாளர் செ.குருமூர்த்தி மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் வரவேற்று நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள்.
ரோட்டரி சங்கத் தலைவருக்கு பாராட்டு
முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கிய தஞ்சை ஹெரி டேஜ் ரோட்டரி சங்கத் தலைவர் வன்னிப்பட்டு செ.தமிழ்செல்வன் அவர்களுக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ரோட்டரி மெடல் அணிவித்தார்.
ரோட்டரி சங்கச் செயலாளர் க.இரகு, பொருளாளர் எம்.எஸ்.அஜித்வேல், சுகன்யா மெடிக்கல் உரிமையாளர் சவு.பிரபு, திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவக் குழுவினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராரவிச்சந்திரன் ஆகியோருக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார்.
நிகழ்வில், டாக்டர் இரா.கவுதமன் தனது தலைமை யுரையில் மருத்துவமுகாமின் நோக்கம் பற்றியும், நோயைவிட கொடுமையானது மூடநம்பிக்கை, அதி லிருந்து விடுபட்டு உடல்நல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று கூறினார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் உரையாற்றினார். பின்னர், மருத்துவ முகாம் குழுவை ஒருங்கிணைத்த பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை அவர்களுக்கு ஜாதிஒழிப்பு வீரர் ஒக்கநாடு கீழையூர் மாணிக்கம் அவர்களின் வாழ்விணையர் பெரியார் பெருந்தொண்டர் அஞ்சம்மாள் ஆடை யணிவித்து சிறப்பித்தார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளரான பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஒரத்தநாடு ஒன்றியத்தில், ஒக்கநாடு மேலையூரில் பொது மக்களுக்கும், எனக்கும் இயக்க வரலாற்றில் ஓர் கொள்கை சார்ந்த இணக்கமாக மாறிவிட்டது. நான் கடந்த மாதம் லட்சுமணன் அவர் களின் தாயார் தையலம்மாள் படத்திறப்புக்கு வருகை தந்தபோது இங்கு மருத்துவ முகாம் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதை உடனே நிறைவேற்றி மக்களுக்குப் பயன்படும் வகையில் நம் பெரியார் மருத்துவக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை ஆகியோரின் முயற்சியில் இம்முகாம் நடைபெறுகிறது. சிறந்த மருத்துவர்கள் வருகை தந்துள்ளார்கள், இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இவ்வூர் மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டுதலுடன் பணியாற்றும் இவ்வூர் இயக்கத் தோழர்கள், குறிப்பாக ஊராட்சி மன்றத்தலைவர் உள் ளிட்ட அனைத்து நண்பர்களையும் பாராட்டி இம் முகாமை தொடங்கி வைப்பதில் பெருமைக் கொள் கிறேன்” என்று உரையாற்றினார்.
முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள்சீனிவாசன், கனகராஜ், புஷ்பா, பிரதீபா, ராசாத்தி மற்றும் செவிலியர் கள், பொதுமக்களுக்கு நல்ல முறையில் மருத்துவமும், ஆலோசனைகளும் வழங்கினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர் கள் மற்றும் தோழர்களுக்கு தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ம.ராசா (எ) ராசரெத்தினம் சுவை யான அசைவ உணவு வழங்கினார். தேநீர், பிஸ்கட், குடிநீர் மற்றும அடிப்படை தேவைகளை சுகன்யா மெடிக்கல் உரிமையாளர் மக்கள் சேவகர் சவு.பிரபு வழங்கினார்.
முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.
பதிவு செய்து மருத்துவம் பார்த்தவர்கள் 228 பேர்
ஆண்கள் – 98, பெண்கள் -130
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆவது பிறந்தநாள் என்பது ஊரின் மனிதநேய விழாவாகவும், ஊர்மக்களின் இணைப்பு பாலமாகவும் அமைந்து அனைத்துக்கட்சியினரும் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.
நிகழ்ச்சியில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட கழக செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை.கவுதமன், மாநகர ப.க. செயலாளர் இரா.வீரகுமார், மாநகர இளைஞரணி துணைத்தலைவர் அ.பெரியார் செல்வன், ரோட்டரி சங்கத்தின் பொறுப்பாளர்கள் ச.கலைச்செல்வன், சக்திவேல், இராஜேஷ் மாவட்ட கழக வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன் ஒன்றியச்செயலாளர் மாநல்.பரமசிவம், நகர கழகத் தலைவர் பேபி.ரெ.இரவிச் சந்திரன், நகர கழக செயலாளர் இரா.இரஞ்சித்குமார், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.சுப்ரமணியன், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் பேபி.ரெ.இரமேஷ், மாநகர கழகத் தலைவர், ப.நரேந்திரன், செயலாளர் அ.டேவிட், ஒன்றிய கழகத் துணைத் தலைவர் இரா.துரைராசு மற்றும் ஒக்கநாடு மேலையூர் தோழர்கள், கிளைக் கழகத் தலைவர் அ.ராசப்பா, செயலாளர் நா.வீரத்தமிழன், மா.தென்னவன், மா.பாண் டியன், மா.திருப்பதி, மா.திராவிடச்செல்வன், ஆ.ராச காந்தி, ஒன்றிய திராவிட தொழிலாளரணித் தலைவர் துரை.தன்மானம், ப.பாலகிருஷ்ணன், அ.வீரமணி, செ.சபரி, தஞ்சை மாநகர கழக மகளிரணி செயலாளர் அ.சாந்தி, மகளிரணி சா.சுகந்தி, மாணவர் கழக ப.யாழினி, லெ.நன்மாறன். லெ.தமிழ்மாறன், ர.நிரஞ்சன் மற்றும் பெரியார்நகர் சு.இராமதாஸ், இரா.மகேசுவரன், மழவ ராயர் தெரு, வீ.இளையராசா, அறிவுவழி காணொளி இயக்குநர், அரும்பாக்கம் தாமோதரன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினார்கள். மாநில பெரியார் வீரவிளையாட்டுக் கழகச்செயலாளர் நா.இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
– தொகுப்பு கோபு.பழனிவேல்