தற்போது உலகம் 24/7 என முழு நேரமாக மாறி விட்டதால் வேலை கலாச்சாரமும் மாறிவிட்டது. இரவு உணவை 9:00 மணிக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு பக்க வாதம் பாதிப்பு ஏற்பட 28% வாய்ப்புள்ளது என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 1 லட்சம் பேரிடம் ஏழு ஆண்டுகளுக்கு அவர்கள் வாரநாட்கள், வார இறுதி நாட்களில் சாப்பிடும் நேரம், உணவு குறித்து கேட்கப்பட்டது. இதில் சிலர் இரவு உணவை 8:00 மணிக்குள்ளும், சிலர் 9:00 மணிக்குப் பின்பும் என பதிலளித்தனர். இதில் இரவு உணவை மிக தாமதமாக எடுப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித் துள்ளனர்.
————–
வெள்ளைத் தங்கம்!
மின்சார வாகனத்துக்கான பேட்டரி தயாரிப்பதற்கு லித்தியம் பயன்படுகிறது. இது ‘வெள்ளைத் தங்கம்’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பெரிய அளவிலான லித்தியம் இருப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘சால்டன் கடல்’ ஏரியின் கீழ் பகுதியில் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியின் நீர்பிடிப்பு பரப்பளவு 21,700 சதுர கி.மீ. ஏரியின் கீழ் பகுதியில் 1.8 கோடி டன் அளவு லித்தியம் உள்ளது. இது 35.70 கோடி மின்சார வாகன பேட்டரி தயாரிப்பதற்கு சமம். இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் கோடி இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
————–
3டி கான்கிரீட் பிரிண்டிங் இயந்திரம் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி கான்கிரீட் உபகரண உற்பத்தி நிறுவனமான அஜாக்ஸ் என்ஜினீயரிங், அதன் சொந்த 3டி கான்கிரீட் பிரிண்டிங் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் 3டி கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தனது பயணத்தை அறிவித்தது. இந்த நிறுவனம் 3 நாட்களில் 350 சதுர மீட்டர் வீட்டைக் கட்டி தொழில்நுட்பத்தை இன்று காட்சிப்படுத்தியுள்ளது. வழக்கமான கட்டட முறைகளில் பொதுவாக ஒரே மாதிரியான வீட்டைக் கட்டுவதற்கு மாதங்கள் தேவைப்படும் போது, அஜாக்ஸ் 3டி கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பம் வேகமான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான மாற்றுகளை வழங்குகிறது.
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீடு, அரசாங் கத்தின் மலிவு விலை வீட்டு இலக்குகளை அடைய உதவும் வெகுஜன வீட்டுத் தீர்வுகளுக்கான களத்தை அமைக்கிறது. இருப்பினும், அஜாக்ஸ் 3டி கட்டுமான பிரிண்டிங்கானது வீடுகளோடு மட்டும் நின்றுவிடவில்லை, அதன் திறன்கள் வில்லாக்கள், அஞ்சல் நிலையங்கள், தீயணைப்பு நிலை யங்கள், காற்றாலைகளுக்கான தளங்கள் மற்றும் சிற்பங்கள் போன்ற பரந்த அளவிலான கட்டமைப்புகளை வடி வமைக்கும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இந் நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் சுபப்பிரதா சாஹா தெரிவித்துள்ளார்.