வேலூர், டிச. 21- 16.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வேலூர் சுயமரியா தைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கில் எழுச்சியோடு பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் நடை பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதாசன் தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் பெ.சுப் பிரமணி வரவேற்புரை ஆற்றி னார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.தன பால் முன்னிலை வகித்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செய லாளர் அண்ணா.சரவணன் நோக்கவுரை ஆற்றினார், பகுத் தறிவாளர் கழக மாநில தலை வர் இரா.தமிழ்ச் செல்வன் சிறப்புரையாற்றினார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர் மானங்களை ஏற்று செயல் படுத்துவது என தீர்மானிக்கப் பட்டது.
தந்தை பெரியார் அவர்க ளின் 50 ஆண்டு நினைவு நாளையொட்டி பகுத்தறிவா ளர் கழகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய்யம் சென்னை இணைந்து தந்தை பெரியார் நினைவு நாளான 24.12.2023 அன்று குடியாத்தம் பெரியார் அரங் கில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவதென தீர்மா னிக்கப்பட்டது.
ஒன்றியம் தோறும் பகுத் தறிவாளர் கழக அமைப்புகளை உருவாக்குவது என தீர்மானிக் கப்பட்டது.
இயக்க இதழ்களான விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு, Rationalistஆகிய இதழ்களுக்கு சந்தா சேர்த்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியார் நினைவு நாள் பேச்சுப் போட்டி, கல் லூரி மாணவர்களை பெரும் அளவில் பங்பேற்கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
கீழ்கண்ட புதிய பொறுப்பா ளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
மருத்துவர் பழ ஜெகன்பாபு மாவட்ட தலைவர், பகுத்தறி வாளர் கழகம்
மா.அழகிரிதாசன் – மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
வே.வினாயகமூர்த்தி – மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்
க.சையத் அலீம் – மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
பி.தனபால் – மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
ஆ.துரைசாமி – வேலூர் மாநகர தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
தி.க.சின்னதுரை வேலூர் மாநகர செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
பெ.சுப்பிரமணி – பேர்ணாம்பட்டு நகர அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்
மு.சுபாஷ்சந்திரன் குடியாத்தம் ஒன்றிய அமைபாளர், பகுத்தறிவா ளர் கழகம்
இந்நிகழ்வில் கழகக் காப்பா ளர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் உ.விஸ் வநாதன், பொதுக்குழு உறுப்பி னர்கள் கு.இளங்கோவன்,
க. சிகாமணி, மாவட்ட அமைப் பாளர் நெ.கி.சுப்பிரமணி, கழக காப்பாளர்கள் ச.ஈஸ்வரி,
ச.கலைமணி, மகளிரணி ந.தேன் மொழி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.லதா, மாநகர தலைவர் ந.சந்திரசேகரன், மாநகர செயலாளர்
அ.மொ.வீரமணி, ஆற்காடு பகுத் தறிவாளர் கழகத் தோழர் வெ.தங்கராசு, ஆற்காடு நகர தலைவர் கோ.வினாயகம், குடி யாத்தம் நகர தலைவர் சி.சாந்த குமார், குடியாத்தம் நகர அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட இளைஞ ரணி தலை வர் பொ.தயாளன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மு.சுப்பிரமணி, ஓவியர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வே.வினாய மூர்த்தி நன்றியுரையாற்றினார்.
தந்தை பெரியார் நினைவு நாளில் இலவச கண் சிகிச்சை முகாம் வேலூர் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
Leave a Comment