சென்னை,டிச.21- சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா 19-12-2023 செவ்வாய்க் கிழமை காலை 09-30 மணிக்கு பாசறை ஒருங் கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் எம்.ஹரி முன்னிலை யில் 84ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் த.வ.லால், கு.சங்கர்( அம்பத்தூர் தெற்கு பகுதி பொருளாளர் தி.மு.க.) ஆகியோர் படத்தை திறந்து வைத்தனர்.
க.இளவரசன் (ஆவடி மாவட்டசெயலாளர்) இனிப்பு வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் சரவணகுமார், அரவிந்தன், கோ.ஜனா, கென்னடி, மணவாளன், அசோகன், மீன்குமார், அய்யப்பன்( தி.முக.மா.பி.) ஆகியோர் கலந்து கொண்டனர்.கார்த்தி நன்றி கூறினார்.
இனமானப் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா
Leave a Comment