திருப்பத்தூர்,டிச.21- திருப்பத்தூர் மாவட்ட மேனாள் தலைவரும், தந்தை பெரியார் அவர்களோடு இறுதி நாள் வரையில் பயணித்து திராவிடர் கழகத்தின் கொள்கைத் தூணாக திகழ்ந்த சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந் தொண்டர் ஏ.டி.கோபால் 15ஆவது நினைவு நாளான இன்று (21.12.2023) திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் அவர் படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத் தப்பட்டது.
ஏ.டி.கோபால் நினைவு நாளில், அய்யா அவர்களின் பெயரில் அவர் குடும்பத்தின் சார்பில் தேநீர் கடை திறக்கப்பட்டு, அய்யா அவர் களின் நினைவை போற்றும் விதமாக, இரண்டு நாட்களுக்கு தேநீர் ரூ. 5 க்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்ட செயலாளர் கலை வாணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.ஏ.சிற்றரசன், விடுதலை வாசகர் வட்ட அமைப் பாளர் எம்.என்.அன்பழகன், மாவட்ட இளை ஞரணி தலைவர் எஸ்.சுரேஷ் குமார், சோலை யார்பேட்டை நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், நகர பொறுப்பாளர் ஏ.டி.ஜி.ஜித்து, நகர அமைப்பாளர் ராஜேந் திரன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் ர.நாகராசன், நகர பொறுப்பாளர் அரவிந்த், நகர அமைப் பாளர் க.முருகன், தொழி லாளரணி அமைப்பாளர் மோகன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
‘சுயமரியாதைச் சுடரொளி’ ஏ.டி.கோபால் நினைவுநாள்
Leave a Comment