சென்னை,டிச.21- தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற சென்னை புத்தகக் காட்சியின் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2024 ஜனவரி 3 ஆம் முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புத்தகக் காட்சியை அடுத்த மாதம் 3 ஆம் தேதி மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். சென்னைபுத்தகக் காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.