அகமதாபாத், அக். 22 குஜராத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடக்கும் கர்பா நடனத் தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் நவராத்திரியின் 9 நாட் களும் அம்மாநில நாட் டுப்புற நடனமான கர்பா நடனமாடி மக் கள் கொண்டாடுவது வழக்கமாம். இதற்காக பொது இடங்களில் கர்பா பாடல், நடனங் கள் நடத்தப்படும். இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநி லம் முழுவதும் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்த தாக வெளியாகி இருக் கும் தகவல் நாடு முழு வதும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் 20.10.2023 அன்று 24 வயது இளைஞரும், கபட்வன்ச் பகுதியில் 17 வயது சிறுவனும் கர்பா நடனத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை விட அதிர்ச்சிகர மாக வதோதராவின் தபோய் பகுதியில் 13 வயது சிறுவன் மார டைப்பால் இறந்துள் ளான். நவராத்திரியின் முதல் 6 நாட்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இதய பாதிப்பு தொடர்பாக 521 அழைப்புகள் வந் துள்ளன. மூச்சுத் திண றல் தொடர்பாக 609 அழைப்புகள் வந்துள் ளன. இவை அனைத் தும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் வந்துள் ளன.
இந்த நேரத்தில் தான் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது வழக்கமாம்! எனவே, கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பொது மருத்து வமனைகள், சுகாதார நிலையங்கள் விழிப்பு டன் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள் ளது. கர்பா நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், விழா நடக்கும் இடங் களில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு உள்ளிட்ட அவசரகால ஏற்பாடுகளை செய் திருக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளனர். நவ ராத்திரிக்கு முன்பாக, கர்பா நடன ஒத்திகை யின் போது குஜராத் தில் 3 பேர் மாரடைப் பால் பலியானது குறிப் பிடத்தக்கது.