வல்லம்,தஞ்.20- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி முறை “அறிவியல் வெளியீடு மற்றும் காப்புரிமை” ஆகியவற்றின் நுணுக் கங்கள் பற்றிய பன்னாட்டு கருத் தரங்கம் 18.12.2023 அன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக் கழக இயக்குநர் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வெளியீட்டு மய்யத்தின் பேரா.பாலகுமார் பிச்சை தொகுத்த “அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிவியல் வெளியீட்டின் தன்மையை” விளக் கும் உலகளாவிய புத்தகத்தை பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் பெற்றுக் கொண்டு பல்கலைக் கழக அர்ஜுன் சிங் நூலகத்திற்கும் மற்றும் சென்னை பெரியார் திடல் நூலகத்திற்கும் வழங்கினார்.
இந்த உலகளாவிய புத்தகத்தை பல்கலைக்கழக பேரா.பாலகுமார் பிச்சை மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கவுரா ஜெகதீஸ் மற்றும் பார்சு னேட்டோ செனோட்டார் ஆகி யோர் இணைந்து தொகுத் துள்ளனர். மேலும் பன்னாட்டு பதிப் பகத்தாரான ‘ஸ்பிரிங்கர் நேச்சர் சிங்கப்பூர்’ இந்த புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) “அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிவியல் வெளியீட்டின் தன்மை” நூல் வெளியீட்டு விழா
Leave a Comment