காரைக்குடி, டிச. 20- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யைச் சேர்ந்த கழனிவாசல் – வ.சூரக்குடிக்குச் செல் லும் புறவழிச் சாலையை, திருச்சி-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையு டன் (NH210) இணைக் கும் முக்கியமான பகுதி. வருவாய்த் துறை பதி வேட்டில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ள புல எண்: 55 ஆகும்.
இந்த அரசு புறம் போக்கு நிலமாக சுமார் 900 ஏக்கருக்கு மேல் மேற்குப் பக்கமாக இருக் கின்றது.
“காரைக்குடியில் பயிற்சி பெறவிருக்கும் விளையாட்டு வீரர்களுக் காக, கம்பன் நகர் நுழைவு வாயிலினுள்ளே இருக்கும், கழனிவாசல் கிராமம் புல எண் 55 (TS. No. 55)இல் தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு சுமார் 7.5 ஏக் கர் நிலம் ஒப்படைக்கப் பட்டது.
இந்த நிலம் மேற்குப் பக்கமாக இருக் கின்றது. அரசு பொது விளையாட்டரங்கமாக வருவதற்கு சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட நிலத்தில் புதிதாக அமைக்கப்படும் எனவும், இதற்கு ரூ.3 கோடி மதிப் பீட்டுப்படி அரசு நிதி ஒதுக்கீடு செய்து இதன் அடிக்கல் நாட்டும் காணொலி மூலம், கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்ட மன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி உட்பட நகர சமூக ஆர்வலர்களும், விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிலத்தை சமப்படுத்திட பணிகள் நடந்து வருகிறது.”
“இந்த அரசு விளை யாட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட்டு நிலத் தில் வட கிழக்குப் பகுதி முனையில் சுமார் 25 சென்ட் நிலத்தை, அர்ச்சு ணன், இராஜேந்திரன் என்ற நபர்களால் அத்து மீறி, அரசு சட்ட விதிக்கு எதிராக, “கருப்பர் கோயில்” எனும் பெயரில் கட்டப் பட்டு இருக்கிறதால், அதை விடுத்துவிட்டு வரு வாய் துறை, விளையாட் டுத் துறையால், மற்ற இடங்களை மட்டும் சுத் தப்படுத்தி வருகின்றார் கள்.
ஆனால் அரசு பொது விளையாட்டரங்கம் அமைக்கப்படும் 7.5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆக்கிரப்பைச் செய்து கோவில் இருப்பதை, மாநில அரசு உடனடி யாக அப்புறப்படுத்திட வும், விளையாட்டரங்கம் கட்டுமானப் பணிகளுக்கு பெரும் தடையாகவும் இடையூறாகவும் இருப்ப தால் இந்தக் கோயிலை அப்புறப்படுத்திடவும், முழுமையான அரசு நிலத்தில் விளையாட்ட ரங்கம் கட்டுமானப் பணி களை தொடங்க வேண்டு மென மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
தமிழ்நாடு அரசு விளை யாட்டுத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?