தா.பழூர், டிச. 20- அரியலூர் மாவட்டம் உதய நத்தத்தில் தா.பழூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 16. 12 .2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் மகாலிங் கம் இல்லத்தில் நடைபெற்றது.
தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் கடவுள் மறுப்பு கூறினார். ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற் றார். கூட்டத்திற்குஅரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமை யேற்றுகூட்டத்தின் நோக்கங்களை விளக்கினார்.
மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினர்.தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந் தனைச் செல்வன் இயக்க செயல்பாடுகள் குறித்தும்,இயக்கத்தின் செல்வாக்கு குறித்தும் சிறப்பாக கழகத்தினை வளர்த் திட வேண்டியதன் காரணங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ்சேகரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ரத்தின. ராமச்சந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் மு. ராஜா, பெரியார் பெருந் தொண்டர் சொ. மகாலிங்கம், ம.அன்புச் செல்வி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் த. சிவமணி ஆகியோர் பங் கேற்றனர்
அறிவாசான் தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பான பிரச்சாரக் கூட்டம் ஒன்றினை தா.பழூர் ஒன்றியத்தில் நடத்திடுவதெனவும், 91 வது ஆண்டில் 81 ஆண்டு பொது வாழ்க்கையோடு தந்தை பெரியாரின் தத்துவத்தை உலகமயமாக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண் டறத்தைப் போற்றும் வகையில் கருத் தரங்கம் ஒன்றினை நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
ஒ.து. தலைவர் உல்லியக்குடி சிற்றரசு.
ஒ.து.செயலாளர் கே.பி.ஆசைத்தம்பி
கோரைக்குழி.
ஒன்றிய மகளிரணி தலைவர் : இர.இலக்கியச் செல்வி கோடங்குடி
செயலாளர்: ம.அன்புச்செல்வி
உதயநத்தம்.
தா.பழூர் ஒன்றியத்தில் தந்தை பெரியார் இறுதி முழக்க விளக்க பொதுக் கூட்டம் கலந்துரையாடலில் முடிவு
Leave a Comment