சென்னை, டிச. 20- பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் அய்ந்தாவது ஆங்கில இலக்கிய கூட்டம் 17.12.2023 அன்று சென்னை எழும்பூர் புத்தக நிலை யத்தில் நடைபெற்றது. இஸ்ரேல் குறித்த முழுமையான வரலாற்றை விளக்கும் உலக அரங்கில் பரபரப் பாகப் பேசப்பட்டு வரும் ரஷீத் காலிதி எழுதிய ‘பாலஸ்தீனத்தின் மீதான நூறு ஆண்டு போர்’ – THE HUNDRED YEARS’ WAR ON PALESTINE’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை குயில்மொழி திறனாய்வு செய்தார்.
பாலஸ்தீனத்தின் மீதான நூறு வருடப் போர்” பாலஸ்தீனத்தின் சிக்கலான வரலாற்றை ஆராய்கி றது, மோதலின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார பரிமாணங்களில் கவனம் செலுத்துகிறது. ஏகாதிபத் தியம், தேசியவாதம் மற்றும் மத பதட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளை காலிதி ஆராய்கிறார், ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கான போராட் டத்தின் விரிவான பார்வையை வழங்குகிறார்.
சம்பந்தப்பட்ட அதிகாரங்களின் தொடர்பு மற் றும் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் மீதான தாக்கத்தை அவர் ஆராய் கிறார், அப்பகுதியில் நடந்து வரும் விவாதங்கள் மற்றும் போராட் டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
நாம் இப்போது பாலஸ்தீனில் நடக்கும் பிரச்சினையை அக்டோ பர் ஏழிலிருந்து தொடங்கக்கூடாது. நூறு ஆண்டுகளாக எப்படி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ப தைக் கவனிக்க வேண்டும். இரண் டாம் உலகப் போரின் முடிவில் உலகமே யூதர்கள் மீது கருணையும் பரிதாபமும் கொண்டது. காரணம் ஹிட்லர் மீது புரிந்த கொடும் செயல்கள். இலட்சக்கணக்கான யூதர்கள் இறந்தார்கள். அய்ரோப் பாவிலிருந்து தப்பி ஓடியவர்க ளுக்குப் புகலிடம் அளித்த நாடு பாலஸ்தீனம். இன்றைக்கு யார் நேசக் கரம் நீட்டினார்களோ அவர்களுக்கே இரண்டாம் உலகப் போரின் நடந்த கொடுமைகள் யூதர்களால் அரங்கேற்றப்படு கின்றன என்பதுதான் வேதனை.
இந்த பிரச்சினையில் இந்தியா வின் நிலைப்பாடு, அமெரிக்கா பிரித்தானிய, ரஷ்யா போன்ற நாடுகளின் நிலைப்பாடு சீனாவின் கள்ள மவுனம் என மிக அருமை யாகப் பாடம் எடுத்தார் குயில் மொழி. தங்கு தடையற்று சரளமாக ஆங்கிலத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் புத்தகத்தில் இருக்கும் செய்திகளைக் கோர்வை யாக நேர்த்தியாக அனைவருக்கும் வழங்கும் படியாக எடுத்து இயம் பியது குயில்மொழியின் சிறப்பா கும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாநிலக் கல்லூரியின் அரசியல் அறிவுத் துறை பேராசிரியர் முனை வர் முத்துக்குமார் குயில்மொழியின் நூல் அறிமுகத்தைப் பாராட்டி யதோடு மட்டுமில்லாமல் அது தொடர்பான தன் கருத்துகளையும் எடுத்துரைத்தார். ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.