22.10.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை
👉பாஜக ஒரு பாசிச அமைப்பு – மனித குலத்திற்கே எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்.
👉தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
👉‘நீட்’ விலக்குக் கோரி கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தி இந்து:
👉பாஜக எம்பிக்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான புகார்களை கையாள்வதில் நாடாளுமன்றக் குழுக்கள் இரு விதமாக நடந்து கொள்கின்றன என பி.எஸ்.பி. எம்.பி. டேனிஷ் அலி கண்டனம்.
👉 மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை வெளிப்படுத்துமாறு அனைத்து அரசுத் துறைகளிலிருந்தும் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் நியமனம்; தேர்தலுக்கு முந்தைய அரசியல் பிரசாரம் செய்ய அரசு ஊழியர்களை எப்படி கேட்கலாம் என்று காங்கிரஸ் கேள்வி
தி டெலிகிராப்:
👉சாலைத் திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம், அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேறு சில திட்டங்களில் மோடி அரசின் ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் மாற்றம். காங்கிரஸ் கண்டனம்.
👉கேரள கோவில்களில் ஆர்எஸ்எஸ் நடவடிக்கை களுக்கு தடை விதித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது
– குடந்தை கருணா