19.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் 72 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடி நீக்கம். பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் எதிர்க்கட்சிகளின் 33 எம்பிக்களும், மாநிலங்களவையில் 45 எம்பிக்களும் ஒரே நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 18 எம்பிக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விவகா ரத்தில் இதுவரை 92 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
* பிரதமர் மோடியை இன்று (19.12.2023) இரவு 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளப் பாதிப்புக் கான நிதி குறித்து பேசுவார்.
* ஆளுநர்களின் அதிகாரம் குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
* தெலங்கானாவில் அனைத்து மக்களவை இடங் களிலும் வெற்றி பெறுவோம், காங்கிரஸ் நம்பிக்கை.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஒரே பாலின ஜோடிகளுக்கு கிறிஸ்துவ கோயில்களில் பாதிரிமார்கள் ஆசீர்வாதம் வழங்கலாம், வத்திக்கான் போப் அனுமதி.
* சிறுபான்மை கல்வி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முழு அமர்வுக்கு வழக்கினை விசாரித்திட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசியல் ரீதியாக, தற்காலிக விதியான 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது நல்லது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அரசமைப்பு மற்றும் கூட்டாட்சி கொள்கைகளை மீறும் வகையில் – ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்கிறார் மூத்த வழக்குரைஞர் பாலி நரிமன்.
தி இந்து:
* எய்ம்ஸ் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், ஓபிசிக்கான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வில்லை என நாடாளுமன்ற ஓபிசி குழு அறிக்கை.
தி டெலிகிராப்:
* எதிர்க்கட்சி எம்.பிக்கள் தற்காலிக நீக்கம் தான் குஜராத் மாடல்.
*”மோடி” என்பது “இந்தியாவில் ஜனநாயகத்தின் கொலை” என்று விரிவுபடுத்தப்படும் வார்த்தையின் சுருக்க மாகும். (Murder Of Democracy in India) என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டம்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment