* காரைக்குடி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் எட்டு விடுதலை சந்தா வழங்கப்பட்டது. 15.12.2023 அன்றைய நிகழ்வில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட காப்பாளர் சாமி திராவிட மணி மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், ப.க. துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, காரைக்குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன் நகர செயலாளர் தி.கலைமணி, கல்லல் ஒன்றிய தலைவர் ஆ .சுப்பையா, ப.க மாவட்ட தலைவர் சு.முழுமதி, ஆ.பால்கி, தேவகோட்டை நகர தலைவர் வீ .முருகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
* ஈரோடு மாவட்டம்-சிவகிரி காவல்உதவி ஆய்வாளர் ஆ.மோகன சுந்தரம் நினைவு நாளை (21.12.2010) முன்னிட்டு அவரது மாமாவும், ஈரோடு மாவட்டக் கழகக் காப்பாளருமான சிவகிரி கு.சண்முகம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ 500 வழங்கினார். நன்றி.