தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.12.2023) புதுடில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கா.ப.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.லட்சுமிபதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.சிறீதர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தி லிருந்து தலைமைச் செயலாளா சிவ்தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் க.நந்தகுமார் ஆகியோரும், காணொலிக் காட்சி வாயிலாக வருவாய் நிருவாக ஆணையர் – கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.12.2023) புதுடில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்
Leave a Comment