அட ஜோதிடப் பைத்தியங்களே, படியுங்கள் கீழே!

2 Min Read

இன்றைய ‘தினமலர்’ ஏட்டில் (19.12.2023) 5ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஓர்அருவருக்கத்தக்க செய்தியினை அப்படியே தருகிறோம்.
ஜோதிடரால் வந்த ஆபத்து-
சிக்கிய பா.ஜ., பிரமுகர்
‘‘செங்கம், டிச. 19- செங்கம் அருகே, ‘ஜாதக ரீதியாக இளம் பெண்ணிடம் தனிமையில் இருந்தால், அரசியல் பலம் பெருகும்’ என்று ஜோதிடர் கூறியதை நம்பி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ., பிரமுகர், உடந்தையாக இருந்த அப்பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரிமங்கலம் பஞ்., தலைவி செல்வி, (50), இவரது கணவர் சீனிவாசன், (55). இவர், பா.ம.க.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்த நிலையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலர் பொறுப்பில் இருந்தார்.
தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பா.ஜ., உறுப்பினராக மட்டும் உள்ளார். அவரிடம், ஜாதக ரீதியாக, 25 வயதுக்குள் உள்ள பெண்ணி டம், ‘தனிமை’யில் இருந்தால், மீண்டும் தொடர்ந்து அவரது மனைவியோ, அல்லது அவரோ பஞ்., தலைவராக நீடிக்க முடியும் என, ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுபோல, அமைதிப்படை என்ற தமிழ் சினிமா படத்தில், வயதான கேரக்டரில் நடித்த சத்யராஜிடம் ஜோதிடர் ஒருவர் கூறுவார்.
ஜோதிடர் கூறியபடி ஆள் தேடிய சீனிவாசன், பஞ்., மக்கள் நலப்பணியாளரான, பேயலாம்பட்டையைச் சேர்ந்த சென்னம்மாள், (22) என்பவரை தேர்வு செய்து, தன்னிடம் ஜோதிடர் கூறியதைக் கூறி, வலையில் வீழ்த்த முற்பட்டுள்ளார். கூடவே, இந்த விஷயத் தில் தனக்கு முழுமையாக ஒத்துழைத்தால், சென்னம் மாளை பஞ்., செயலராக நியமிப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

இதற்கு சென்னம்மாள், கடந்த ஓராண்டாக மறுத்து வந்தார். ஆனாலும், சீனிவாசன் தொடர்ந்து வற்புறுத்த, இது குறித்து கணவர் ராமஜெயம், (26), மாமியார் பச்சையம்மாள், (48), மாமனார் பெருமாள், (50), ஆகியோரிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் சென்னம்மாள்.
ஆனால், அவர்கள் மூவரும், ‘சீனிவாசன் சொல்படி கேட்டு நடந்து கொள்’ எனக் கூறியதால், அதிர்ச்சியடைந்தார் சென்னம்மாள்.
இதையடுத்து, இந்த விஷயத்தை செங்கம் அனைத்து மகளிர் போலீசாரிடம் கொண்டு சென்று, நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரித்த போலீசார், ராமஜெயம், பெருமாள், பச்சையம்மாள் மற்றும் பா.ஜ., பிரமுகர் சீனிவாசன் ஆகியோரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.”

– அட ஜோதிடப் பைத்தியங்களே, உங்களை எப்போது அதிலிருந்து மீட்டுக் கொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்கும் கேள்விக்குப் பதில் கூறுங்கள்!
ஜோதிடப் பித்துக் கொண்ட அரசியல் சோணகிரிகளே நீங்களும் அறிவு பெறுவது எக்காலம்?
மனிதர்களின் கையில் பகுத்தறிவு – மானம் இருக்க – அதை இப்படி இழந்து மூளிகளாக, மூளையினை அடகு வைத்து – மானம் மதிகெட்டு மவுடீகத்தின் உச்சங்களிலிருந்து எப்போது பகுத்தறிவு பூமியில் தரை இறங்கப் போகிறீர்கள்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *