தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் ‘‘நலவாழ்வு நடைப்பயிற்சி சாலைகள் (Health Walk Road Scheme) என்பதை ஏற்படுத்திடும் அரிய சாதனைத் திட்டத்தை நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் அவர்கள் நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கி வைக்க இருப்பதாக அறிகிறோம்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஜப்பானுக்குச் சென்றபோது, இதுபோன்ற நல வாழ்வு நடைப்பயிற்சி சாலைகளைப் பார்த்து, மகிழ்ந்து, விவரம் அறிந்து வந்து, நமது முதலமைச்சரிடம் தெரிவித்தவுடனேயே, அதுபற்றிய விவரங்களை அறிந்து, 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு மட்டும் (ஜப்பானில்) அமைக்கப்பட்டிருந்த இந்த சாலை நடைப்பயிற்சியாளர்களுக்கு (Health Walk Ways) மட்டும் என்பது சிறப்பானது.
ஜப்பானில் முதுமையாளர்களின் மக்கள் தொகை மிக அதிகம்; காரணம் முதியவர்களின் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும்தான்!
38 மாவட்டங்களில் இப்படி ஓர் எடுத்துக்காட்டான நல்வாய்ப்புகள் – தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் அவர்களையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.
முதுகுடி மக்களுக் கென ஒரு தனி டிராக் (Track) அதில் அமைந் தால் – மற்றவர்கள் வேகத்தில் அவர்கள் பங்கேற்க முடியாத நிலையிலும் – அவர் களுக்கென பாதுகாப் பான நடைபயிற்சி என்ற நலத்தின் பயனை அவர் களும் பெற முடியும். அனைவரும் நாளும் நடந்து பழகுவோம் – நல்லிணக்கம் பெருக்கி மகிழ்வோம்!
இவை உருவாகக் காரணமான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் பாராட்டி, வாழ்த்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.10.2023