கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

18.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டம் டிசம்பர் 21 டில்லியில் நடைபெறும் – கார்கே.
* 2024 பொதுத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் – இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு திமுக வேண்டுகோள்.
* டில்லியில் வரும் 19ஆம் தேதி நடக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மம்தா பங்கேற்பு.
* நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக மோடி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், கேள்வி கேட்கும் எம்.பி.க்களை நீக்கக்கூடாது என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் நாடாளுமன்றத்துக்குள் குதித்த மர்ம நபர்களுக்கு பாஸ் விநியோகித்ததாக போலி செய்தி பரப்பிய குற்றச்சாட்டில், தமிழ்நாடு பாஜக நிர்வாகி ’சங்கி இளவரசர்’ பிரவின்ராஜ் மீது வழக்கு.
தி இந்து:
* 13 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம்.
* நாட்டில் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, தற்போதைய 6% வளர்ச்சி விகிதம் போதுமானதல்ல. இதே நிலை நீடித்தால் 2047ஆம் ஆண்டு வரை இந்தியா பணக்கார நாடாக திகழ்வதற்கு சாத்திய மில்லை என, ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
தி டெலிகிராப்:
* நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர் செய்தித்தாள் ஒன்றில் பேசுகிறார் – உள்துறை அமைச்சர் செய்தி சேனலில் பேசுகிறார். ஆனால் எங்கு பேச வேண்டுமோ (நாடாளுமன்றத்தில்) இவர்கள் யாரும் பேச மாட்டார்கள்,என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி காட்டம்.
* தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தது ‘மிகப்பெரிய கொள்ளை’ என காங்கிரஸ் கண்டனம். இந்திய மக்களின் செலவில் மோதானி (மோடி பிளஸ் அதானி) எப்படி வளம் பெறுகிறார் என்பதற்கு இது மற்றொரு உதாரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடல்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *