சென்னை, டிச.18 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன், செய லாளராக ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாள ராக ஜி.ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரியமிக்க வழக்குரைஞர்கள் சங்க மான – எம்.எச்.ஏ.ஏ. வழக்குரைஞர் சங்கத்துக் கான தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்றது. இதில்சங்கத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு 105 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலை நடத்தும் அலுவலராக மூத்த வழக்குரைஞர் கபீரை உயர்நீதிமன்றம் நியமித்திருந்தது.
சி.அய்.எஸ்.எஃப். மற்றும் மாநில காவல் துறையினரின் அய்ந்தடுக்குப் பாதுகாப்பு வளையத்தில் கடந்த 15 ஆம் தேதி நடத்தப் பட்ட இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி யான 4 ஆயிரத்து 752 வாக்காளர்களில், 3 ஆயிரத்து 476 பேர் வாக்களித்தனர். தலை வர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக் கான வாக்கு எண்ணிக்கை 15.12.2023 அன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. மற்ற பதவி களுக்கான வாக்கு எண்ணிக்கை 16.12.2023 அன்று காலை தொடங்கி இரவு வரை நடந்தது.
இதில் எம்எச்ஏஏ வழக்குரைஞர் சங்கத் தின் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் அவர்கள் 1,301 வாக்குகள் பெற்று மூன் றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சட்டப் பிரிவு செயலாளர் பால்.கனகராஜ் 1,134 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
சங்கத்தின் செயலாளராக ஆர். கிருஷ்ண குமார் 2 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
கடந்த முறையும் ஜி.மோகனகிருஷ்ணன், ஆர். கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் தலைவர், செயலாளராக பதவிவகித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சங்கத்தின் துணைத் தலை வராக எஸ்.அறிவழகன், பொருளாளராக ஜி.ராஜேஷ், நூலகராக வி.எம்.ரகு ஆகி யோர் தேர்தெடுக்கப்பட்டனர். இதேபோல 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய் யப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர் வாகிகளுக்கு சக வழக்குரைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.