தினமும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகின்றவர்களூக்கு நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து 25% குறைகிறது என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழங்கள் பல இருந்தாலும் அவற்றில் சில நீரிழிவை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
நாம் சாப்பிடும் உணவுகளிலுள்ள குளுக்கோஸ் முழுமையாக எரிக்கப் படாததுதான் சர்க்கரை நோய்க்கு மூல காரணம். அந்த குறைபாட்டை சரி செய்து சர்க்கரை நோய் வராமல் தடுக்க அவகேடா பழம் உதவுவதாக மாலிகுலர் நியூட்ரிசன் அண்டு ஃபுட் ரிசர்ச் ஆய்வில் கண்டறிந் துள்ளனர். அவகேடா பழத்தில் உள்ள அவகோட்டின் பி எனும் சத்து உதவுகிறது. இது அவகேடா பழத்தில் மட்டுமே உள்ளது. இன்சுலின் சுரப்பு குறைபாட்டை தவிர்த்து சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கிறது. தினசரி இரண்டு பழம் சாப்பிட நல்ல பலன் தெரியும் என்கிறார்கள்.
சர்க்கரை தன்மை குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் சத்துள்ள பழம் மாதுளை. இதில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் பாலிபெ னோல்ஸ் அதிகம். இவை உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுத்து இன்சுலின் சுரப்பை சீராக்க உதவுகிறது. 100 கிராம் மாதுளம் பழத்தில் ஒருவருக்கு ஒரு நாள் தேவையான வைட்டமின் டி-யில் பாதி அளவு கிடைத்து விடும். மாதுளம் பழச்சாற்றில் லட்சக்கணக்கான வைரஸ் களை ஒழிக்கும் திறன் உள்ளது. வைரஸ் அழிப்பு மருந்துகளை விட மாதுளை சாறு ஆற்றல் வாய்ந்தது.
ஆப்பிள் ஒரு ‘ஹைபோ கிளைசெமிக்’ பழம். இதில் நார்ச்சத்து அதிகம். இது சர்க்கரை நோயை தடுக்கும் ஒரு அரண். இதில் உள்ள பெக்டீன் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, 50% இன்சுலின் சுரப்பிற்கு உதவுகிறது. ஆப்பிள் பழத் திலுள்ள சில மூலக்கூறுகள் பெருங்குடல் பகுதியில் நன்மை பயக்கும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி புரிகின்றன. மேலும் ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்து, பாலிபெனோல்ஸ், குறைவான கார்போ ஹைட்ரேட் இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும் நாள்பட்ட அழற்சியை தடுக்கிறது.
கொய்யாப்பழம் அதிக நார்ச்சத்துள்ள அதே சமயம் குளூகோஸ் எனும் சர்க்கரை சத்தை மெதுவாக உடலில் கிரகித்துக் கொள்ளும் சக்தி உடையது. குளூகோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப் படுத்துவதில் கொய்யாப்பழமே முத லிடத்தில் இருக்கிறது. இப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளை சோர்விலிருந்தும், மலச் சிக்கலில் இருந்தும் பாதுகாக்கிறது. இப் பழத்தின் கொட்டை உடலில் குளுக்கோஸ் மெதுவாக கிரகிக்கும் வேலையை செய்கிறது. தினமும் 100 கிராம் கொய்யாப் பழம் சாப்பிட்டாலே டைப்-2 சர்க்கரை நோய் தடுக்கப்படும். வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ள கிளைசெமிக் பழம்.
புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவையை வழங்குகிறது. இது குடலில் மெதுவாக குளுக்கோஸை கிரகிக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது. பப்பாளியில் இயற்கையாக அமைந்த ஆன்டி ஆக்சி டெண்டுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு பலவிதங்களில் உதவுகிறது. அவர்களின் செல் பாதிப்பை தவிர்க்கிறது. ஆப்ரிகாட் பழங்களும் இதே பண்புகளை கொண்டுள்ளது.
எல்லா பழங்களிலும் வைட்டமின் சி உள்ளது. அவைகள் காற்றாலும், வெப்பத் தாலும் உலர்ந்தும் கரைந்தும் போகும். ஆனால் நெல்லியில் உள்ள டானிக் என்ற பொருள் வைட்டமின் சி-யை நீண்ட நாள் சிதையாமல் பாதுகாக்கிறது. நெல்லிக் கனியில் உள்ள குரோமியம் சத்து இன்சுலின் சுரப்பை சீராக்கி ரத்தத்திலுள்ள குளுக் கோஸ் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.