தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.12.2023) கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்’’ என்ற இப்புதிய திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, முதலமைச்சரின் முகவரி திட்ட சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ‘‘மக்களுடன் முதல்வர்” சிறப்புப் பணி அலுவலர் ப. மதுசூதன் ரெட்டி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Leave a Comment