தமிழர் தலைவர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் ஆகியோரிடம் இன்று (18.12.2023) முற்பகல் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவர்களிடம் அங்குள்ள மழை, வெள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
தோழர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை அரசுடன் ஒத்துழைத்து மேற்கொள்ளுமாறு கழகப் பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.