புதுடில்லி, டிச.17 உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதியைப் பின் பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சார்ந்த வர்களுக்குத் தீர்ப்புரை எழுதத் தகுதியில் லையா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் சமூகநீதி முழக்கம் எழுப்பினார்.
மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி., ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-
நான் எழுப்பக்கூடிய மற்றுமொரு முக்கிய பிரச்சினையும் இருக்கிறது. அது நீதித்துறை யில் சமூக பன்முகத்தன்மை இல்லை என் பதேயாகும். உயர்நீதிமன்றங்களின் நீதிபதி களின் எண்ணிக்கை அல்லது உச்சநீதிமன் றத்தில் நீதிபதிகளின் பிரதிநிதித்துவத்தைப் பார்க்கும்போது, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் சமூக பன்முகத்தன்மை இல்லை.
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தினால் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல் களைப் பாருங்கள். 2018 முதல் 2029 வரை எடுத்துக்கொண்டால், சுமார் 80% பேர் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றே அறியப் படுகிறது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள்.. அந்த சமூகத்தின் பெயரை குறிப்பிட விரும்ப வில்லை.. மீதமுள்ள 20% பேர் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்கள்..
மேலும், உச்சநீதிமன்றத்தில் இந்த நிலை இன்னும் மோசமாகும்.
அவைத்தலைவர்: நீங்கள் உங்களுடைய கருத்தினைக் கூறிவிட்டீர்கள்.. மிக அழுத்த மாக கூறியிருக்கிறீர்கள்.
பி.வில்சன்: என் கருத்தை மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன். மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றி.. இத்தகைய பிரதிநிதித்துவத்தை அவர்கள் ஏன் கருத்தில் கொள்வதில்லை ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் நீதிபதி ஆவதில் என்ன தவறு.. அவரால் தீர்ப்புகளை வழங்க முடியாது என்று நினைக்கிறீர்களா நான் இரண்டு விஷயங்களைப் பார்க்கிறேன். அதாவது கொலீஜியமானது மற்ற வகுப்பு களைச் சேர்ந்த தகுதியான ஒருவரை அடை யாளம் காணத் தவறிவிட்டது அல்லது மற்ற வகுப்புகளைச் சேர்ந்த திறமையான நபர் களை அடையாளம் காண்பதில் கொலீஜியம் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, இத்தகைய விஷயங்கள் பரி சீலிக்கப்பட வேண்டிய உரிய நேரம் இது வாகும். மசோதாவின் மீது உரையாற்ற வாய்ப் பளித்தமைக்கு நன்றி!
அவைத்தலைவர்: விவாதத்தின் மீது பதிலுரை அளிக்க அமைச்சர் அவர்களை அழைப்பதற்கு முன்பு, சட்டம் இயற்றுவது என்பது மிகவும் தீவிரமான விஷயம் என்று நான் கூறுவேன்.. சட்டம் இயற்றும் பொறுப்பு நம்மிடம் மட்டுமே உள்ளது. இதில் இரண்டு வேறுபட்ட பிரிவுகள் உள்ளன. அரசமைப்பின் உயர் சிற்பியான நாடாளுமன்றமானது, அர சமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தால், அதுவே இறுதியானது. நிர்வாகத் துறையாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி எந்த முகமையும் அதில் தலைமிட முடியாது. ஆனால், சட்டம் என்று வரும்போது, நீதித்துறையானது, நீதித்துறை மறுஆய்வு மூலம் தலையிடும் வழிமுறை உள்ளது.
ஏனெனில் ஒவ்வொரு சட்டமும் அரச மைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எனவே, விஷயங்கள் மிகவும் தெளிவாக உள்ளது. அரசமைப்புச் சட்ட விதியைப் பொறுத்தவரை, நாடாளு மன்றத்தில் இருந்து வெளிப்படுத்தப்படும் அரசமைப்புச் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. நாடாளுமன்றம் மட்டுமே மக் களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் ஒரே அமைப்பாகும். அப்படியே இந்தத் தளமானது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.