சென்னை,டிச.17- திறன்பேசிகள் பெற்றோர்களுக்கும் குழந்தைக ளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் இடைவெளியை ஏற்படுத் தியுள்ளன.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவோ, நிறுவனம் வரும் 20ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை திறன்பேசிகளை அணைத்து வைக் குமாறு வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இதனை மக்களிடம் பிரச்சாரம் செய்ய குறும்படம் ஒன் றையும் தயாரித்துள்ளது.
எப்சிபி இந்தியாவால் உருவாக் கப்பட்டுள்ள இந்த பிரச்சாரப் படம், வரவிருக்கும் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல தயாராகும் மூன்று பேர் கொண்ட குடும் பத்தைப் பற்றியதாகும்.
சுற்றுலாவின் போது தந்தை யுடன் பேசி மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் மகள் தனது தந்தை தொடர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதால் ஏமாற் றம் அடைகிறாள்.
இதை உணர்ந்து கொண்ட தந்தை சில மணிநேரம் அலை பேசியை அணைத்து வைத்து மகளுடன் பேசத் தொடங்குகிறார்.
இதனால் அந்த சிறுமி மகிழ்ச் சியடைவதாக படம் முடிகிறது.
தொடர்ச்சியான அலைபேசி பயன்பாடு குடும்ப உறவுகளை பாதிப்பதை உணர்த்தும் வகையில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திறன்பேசிகளை ஒரு மணிநேரம் அணைத்து வைக்க வேண்டுகோள்
Leave a Comment