சென்னை, டிச. 17- எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவு கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத் தியது. பின்னர் எண்ணூர் முகத் துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.
இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10ஆம் தேதியில் இருந்து தீவிரமாக நடை பெற்று வருகிறது. சுமார் 75 படகு களில் சென்று மீனவர்கள் எண் ணெய் கழிவு களை அகற்றி வருகிறார்கள்.
நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற் றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எண்ணூர் முகத் துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது எண்ணெய் கழிவு களை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது?
பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார்.
எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக் குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதி யிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர்.
மேலும் எண்ணெய் கழிவுக ளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு களை விரைந்து சீரமைத்து விரை வில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது அமைச்சர் மெய்யநாதன், மக்களவை உறுப் பினர் கலாநிதி வீராசாமி, சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ராதா கிருஷ்ணன், மண்டலக் குழு தலை வர் தி.மு.தனியரசு உள்ளிட்ட அதி காரிகள் உடன் இருந்தனர்.