மதுரை, டிச. 17- 2-.12.-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட தலை வர் அ.முருகானந்தம் தலைமையில் மாவட்ட காப்பாளர் தே.எடிசன் ராஜா சே.முனியசாமி ஆகியோர் முன்னிலை யில் தமிழர்தலைவர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் நோக்கங் களை எடுத்துச் சொல்லி தலைமைக் கழக அமைப் பாளர் வே.செல்வம் தொடக்க உரையாற்றி தமிழர் தலைவர் அவரு டைய ஓய்வறியா உழைப்பை தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணியை எடுத்துச்சொல்லி வாழ்த்து முழக்கமிட்டார் மாவட்ட இளைஞர் அணி தலைவர் க.சிவா, செயலாளர் பேக்கரி கண் ணன், நல்லதம்பி ஆகி யோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தோடு கடவுள் மறுப்பாளரான தலைவர் அவர்களின் பிறந்தநாளுக்காக கேக், இனிப்பு வழங்கப்படுகி றது என்பதை சொல்லி மக்களுக்கு வழங்கின.
மக்கள் மகிழ்வுடன் வாங்கி உண்டனர். பகுத் தறிவாளர்கள் கழகத்தின் புறநகர் மாவட்ட தலை வர் ச. பால்ராஜ், காப்பா ளர் முனியசாமி, மந்திரமா தந்திரமா புகழ் பேராசிரி யர் சுப.பெரியார் பித்தன் ஆகியோர் உரைக்குப் பிறகு பகுத்தறிவு எழுத்தா ளர் மன்றத்தின் தலைவர் முனைவர் நேரு அவர்கள் உரையாற்றினார்கள். தன் உரையில் தமிழர் ஆசிரியர் அவர்கள் 91 ஆண்டுகளில் 81 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் அது மட் டுமல்லாமல் அவர் எடுத் துக் கொண்ட பணியை தொடர்ந்து போராட் டங்கள் மூலமாக வென் றெடுத்தவர். இட ஒதுக் கீட்டுக்காக சட்டத்தை உருவாக்கி கொடுத்து அதன் பலனாக இன் றைக்கு தமிழ் சமுதாய மக்கள் அனைவருடைய முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தவர். அவர் உலகி லேயே அதிக வாழ்நாள் வாழும் ஜப்பான் மக்க ளைக் காட்டிலும் நூற் றாண்டுகளை கடந்தும் வாழ்வார். நம் சமூகத் திற்கு உழைத்து அவர் தலைமையில் பெரியார் காண விரும்பிய சுயமரி யாதை சமூகம் அமைய போராட உறுதி ஏற் போம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுப.முருகா னந்தம், மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், செல் லதுரை, ரமேஷ், பகுதி தலைவர் செயலாளர் பெரி.காளியப்பன், மாரி முத்து, கோரா, நல்லதம்பி, மோதிலால், ராஜசேகர், சாமிநாதன், கேசவன், முரளி. ஓட்டுநர் தியாக ராஜன் சிவா அவர்கள் நன்றி கூற விழா நிறைவு பெற்றது.