தருமபுரி, அக்.23- தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல் காவிரியில் 20.10.2023 அன்று, 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 21.10.2023 அன்று காலை விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் 7,714 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5132 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.67 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 47.33 அடியாக உயர்ந்தது.