சென்னை, அக். 23 – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72ஆவது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று (22.10.2023) நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள் வழங்கி கொண் டாடினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-ஆவது பிறந்த நாள் விழா, கட்சியின் மாநில வழக் குரைஞர் அணி தலைவர் சந்திரமோகன் ஏற்பாட்டில் சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் சத்யமூர்த்தி பவன் வளாகத்தில் பட் டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விழாவில் வைக்கப் பட்டிருந்த 72 கிலோ கேக்கை, கட்சி யின் மூத்த தலைவர் பீட்டர் அல் போன்ஸ் வெட்டினார்.
விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அசைவ விருந்தும் வழங்கப் பட்டது. கட்சியின் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் உணவிட்டு விருந்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை, எளியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலிந்த காங்கிரஸ் மூத்த தொண்டர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் வாழ்த்து: கே.எஸ்.அழகிரி பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துகள். மதச்சார்பின்மை, மனித நேயத்தை மய்யப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல் நலத் துடன் பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
மாநில எஸ்சி அணி சார்பில், அதன் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலை மையில் புதுப்பேட்டை பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மின்சாதன பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், பொதுச்செய லாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மாநில மகளிரணி தலைவி சுதா ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.