டோக்கியோ, டிச. 16- ஜப்பானை சேர்ந்த டோக்கோ என்ற நபர் தன்னை ஒரு நாயாக உரு மாற்றிக் கொண்டுள்ளார். அதற்காக அவர் 41,000 டாலர் கள் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் ஆகும். சமீபத்தில் இவரது காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலா னதை தொடர்ந்து அவர் பேசு பொருளாக மாறினார்.
இந்நிலையில் தற்போது டோக்கோவின் மற்றொரு காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நாயாக உருமாறிய டோக்கோ ஒரு நிஜ நாயை சந்திக்கிறார். அவரை கண்டதும் அந்த நாய் குரைக்கத் துவங்கிவிடுகிறது. பின்னர் டோக்கோ மெதுவாக அந்த நாயின் அருகில் செல்கிறார். அதை கண்டு பயந்துப்போன அந்த நாய் அங்கிருந்து ஓடுகிறது. இந்த காட்சிப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் டோக்கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதி விட்ட ஒளிப்படங்கள் அவர் பயிற்சித் தேர்வில் தோல்வியடைந் ததை காட்டுகின்றன. பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தடை களை தாண்டி குதிக்கும் பயிற்சியில் அவரால் வெற்றிபெற முடிய வில்லை. ஒரு இயல்பான நாயைப் போல தாவிக் குதிக்க முடிய வில்லை. அவரது முயற்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித் தாலும் வழக்கம்போல சிலர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தான் நாயாக மாறிய முழு காட்சிப் பதிவையும் டோக்கோ தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிறுவயதாக இருக்கும் போது தனக்கு நாயாக மாறியது போல கனவு வந்ததாக தெரிவிக்கிறார். இருப்பினும் அவர் தனது உண்மையான அடை யாளத்தை வெளியில் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.