திருச்சி, டிச. 16 பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத் தில் கடந்த 14 ஆண்டு காலமாக எல்.சி.எஸ். தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் மருத் துவ வசதி ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி நேற்று பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (எல்.சி. எல்.) சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு கடிதம் அளித்தனர்.
கோரிக்கை: பெல் நிறுவனத் தில் தொடர்ந்து 40 ஆண்டு களாக பணிபுரிந்து வரும் எல். சி.¢எஸ். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவ வசதி பெல் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். அனைத்து சங்கங்களையும் அழைத்து ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி பற்றிய பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். பெல் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 800 தொழி லாளர்கள் மற்றும் குடும்பத் தினர்களின் கோரிக்கைகளை பெல் நிறுவனம் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 800 தொழி லாளர்களுக்கு கடந்த 14 ஆண் டுகளாக எந்தவித ஊதியமும் உயர்த்தி வழங்கவில்லை. ஊதிய உயர்வு கோரி அனைத்து சங் கங்களும் தனித்தனியாக பெல் நிருவாகத்திடம் மனு அளித் துள்ளனர். ஆனாலும் பல மாதங்கள் கடந்த பின்னரும் தொழிற் சங்கங்களை அழைத்து பேசி ஒப்பந்தம் உருவாக்கிட எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மறுத்து வருகிறது. தொழிற் சங்கங்கள் இணைந்து ஜன நாயக வழியிலான போராட் டங்களை நடத்திய பின்னரும் பெல் நிருவாகத்திடமிருந்து அனுசரனையான முடிவுகள் வராத நிலையில், வேறு வழியின்றி இடைக்கால நிவார ணம் வழங்க கோரி வேலை நிறுத்த போராட்டத்திற்கான அறிவிப்பு விடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என் பதை தெரிவித்துக் கொள்கி றோம். டிசம்பர் 27 ஆம் தேதி அன்றோ அதற்கு பின்னரோ வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில் பொதுக்குழு தீர்மானத்தின்படி நேற்று (14.12.2023) மாலை வேலை நிறுத்த கடிதத்தை பெல் நிர் வாகத்திடம் எல்.சி.எஸ். தொழி லாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வழங்கினர்.
பின்னர் பெல் நிர்வாகத்தை கண்டித்து பிரதான வாயில் முன்பு கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு சிறப்பு அழைப்பாளர் தொழிற் சங்க நிர்வாகி நட ராஜன் தலைமை வைத்தார். திராவிடர் தொழிற்சங்க மாநில செயலாளர் மு.சேகர் கண்டன கூட்டத்தை விளக்கி கூறுகையில், ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு கடிதம் பெல் நிர்வா கத்திற்கு கொடுத்துள்ளோம் 15 நாட்களுக்குள் நல்ல தீர்வு கிடைக்கவில்லை என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் முரு கேசன், முருகானந்தம், நடரா ஜன், ராஜ், செல்வராஜ், பூபதி, மலையப்பன், ரமேஷ் மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்களில் இருந்து திரளான தொழிலா ளர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமனம் செய்யக் கோரி பல்வேறு சட் டப் போராட்டங்கள் ஈடு பட்டு வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் பெல் நிருவாகம் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து மேல் முறையீடு செய்து வருவதால் வழக்கு நிலுவையில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் தொழிலாளர்கள் தற்போது வதை சொற்ப ஊதி யமே பெற்று வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஊதி யத்தை உயர்த்தி வழங்கவும் மருத்துவ வசதி செய்து கொடுக் கக் கோரியும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் பெல் நிருவாகத்தின் பிடிவாத போக்கால் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அடிமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.