16.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு; மோடி அரசு விளக்கம் அளிக்காததால், மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடக்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*’குஜராத் மாடல்’ லட்சணம்: 40,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் குஜராத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* விவசாயிகளின் கடன் வட்டி தள்ளுபடி, கல்யாண-கருநாடகா பகுதியை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும், காலியாக உள்ள 35,000 பணியிடங்களை நிரப்ப உறுதியளிக்கப்படும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.
தி இந்து:
* பாஜகவுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை வட மாநிலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
தி டெலிகிராப்:
* தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க நேரம் ஒதுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பது அவரது ஆணவத்தின் சிறப் பியல்பு என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு.
* மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வேலையின்மை மற்றும் மணிப்பூர் பிரச்சினைகளை பிரதமர் மோடியின் முன் எழுப்ப விரும்பினர் என தகவல்.
* அவைத்தலைவரின் வாக்குறுதி மீறல்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என முன்பு உறுதியளித்த மாநிலங்களவைத் தலைவர் தன்கர் தற்போது பாதுகாப்பு மீறல் குறித்து பேச கார்கே பலமுறை முயன்றும் அவருக்கு வாய்ப்பளிக்க மறுப்பு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment