மதுரை,டிச.16- ‘அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்யவும், அலு வலகத்தில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தடை விதிக்க முடி யாது’ என சிபிஅய் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு உத்தரவு பிறப் பித்து உள்ளது.
மதுரை மாவட்டம், நரசிங்கம்பட்டி யைச் சேர்ந்த விவேக், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் நிதி சார்ந்த குற்றங்களில் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். இதற்கு பழிவாங்கும் வகையில், அமலாக்கத்துறையினர் மீது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கியதாகக் கூறி அமலாக்கத் துறை யின் மதுரை மண்டல துணை அதி காரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
35 பேர் தடுத்து வைத்துள்ளனர்
மதுரை மண்டல அலுவலகத்தில் இருந்த அலுவலர்களை அடையாளம் தெரியாத 35 பேர் தடுத்து வைத்துள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் திவாரி வீட்டில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கிருந்த ரகசிய ஆவணங்கள் உள் ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் உடனடியாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் தலைமை செயலாளருக்கு அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. மாநில அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறையால், ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இது அரசின் செயல்பாட்டை பாதிக்கும்.
எனவே, அங்கித் திவாரி மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும். இந்த விசாரணையை மாநில அரசு மேற்கொண்டால் நியாயமான விசா ரணை நடைபெறாது. எனவே அமலாக் கத்துறை அதிகாரி கைது தொடர்பான விசாரணையை சிபிஅய்க்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கின் விசார ணையை சிபிஅய்க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி செயல்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை யினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று (15.12.2023) விசாரணைக்கு வந்தது. அட் வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஹசன் முகம்மது ஜின்னா, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் வழக் குரைஞர் திருவடிக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘காவல் ஆய்வாளர் தகுதிக்கு மேல் உள்ள அதிகாரிகளைக் கொண்ட ஒவ்வொரு லஞ்ச ஒழிப்பு அலுவலகமும் காவல் நிலையம் தான். மாநில அரசின் பகுதிக்குள் லஞ்சம் வாங்கி பிடிபட்ட வழக்கை நடத்தும் அதிகாரம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரியும் ரசாய னம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங் கிய போது தான் பிடிபட்டுள்ளார். இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அம லாக்கத்துறை அதிகாரியின் கைது சட்ட நடைமுறைபடி தான் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு வழக் கிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையிலும் மாநில அரசின் கீழுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையால் ஒன்றிய அர சின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது என ஏற் கெனவே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில், தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
அனைத்தும் விதிப்படியே நடந்துள்ளது
அமலாக்கத்துறை அதிகாரி கைது, அலுவலகம் மற்றும் வீடுகளில் நடந்த சோதனை உள்ளிட்ட அனைத்தும் விதிப்படியே நடந்துள்ளது. இதில், எந்த விதி மீறலும் இல்லை. இந்த மனுவை ஏற்கக் கூடாது. லஞ்ச ஒழிப்புத் துறை யினரின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படி யானதே’’ என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒன்றிய அரசின் கீழுள்ள அலுவலர், அதிகாரி களை லஞ்ச வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்ய முடியாது என்பது ஏற்புடையதல்ல.
லஞ்ச ஒழிப்புத் துறையினரும் காவல் துறைதான் என்பது ஏற்கெனவே பல வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரசாயனம் தட விய ரூபாய் நோட்டுகளை வாங்கிய போது தான் பிடிபட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை.
அமலாக்கத் துறையினரை கைது செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத் தில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
சிபிஅய் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது தேவையற்றது. லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டியதில்லை. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.