கந்தர்வகோட்டை அக் 23 – புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி அக் கச்சிப்பட்டி மாணவ, மாணவி கள் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொண்டனர்.
திருக்குறள் ஒப்பித்தல் போட் டியில் சவுமியா, பல்குரல் போட் டியில் தரணிகா முதலிடம், தனி நடனம் கல்பனா, செவ்வியல் நட னம் தனியொரு பிரிவில் ரித்திகா ஆகியோர் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
களிமண் சுதை வெளிப்பாடு சிவகார்த்திகேயன், தோல்கருவி கள் கபிலன் ஆகியோர் மூன்றா வது இடமும் பெற்றனர்.நாடக குழுவில் சாலை பாதுகாப்பு என்ற நாடகத்தில் தீபக் தலைமையிலான குழுவில் தீபக்குமார், ஆசியா, தமிழரசன், கிரித்தீஷ், வீரலட்சுமி, அரிசேகரன், ஆகி யோர் நடித்த நாடகம் இரண்டா வது இடம் பிடித்துள்ளது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாண விகள் அனைவரையும் பள்ளி யின் சார்பில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, ஆசிரியர்கள் மணி மேகலை, நிவின், வெள்ளைச் சாமி, தனலெட்சுமி, கவுரி ஆகி யோர் பாராட்டினார்கள்.
மாணவிகளின் கிராமிய நடன தலைப்பில் வேளாண் மையின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் வாழ்வியலையும் குறித்து நடனம் ஆடிய மாண வர்களுக்கு ஆசிரியர்கள் அலுவ லர்கள் பாராட்டுத் தெரிவித்த னர். கலைத் திருவிழாவில் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத் திருவிழா தனிப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாண விகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாண வருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்படும் .
இவ்விருதுகள் மூன்று பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப் பட்டு மாணவர்களின் கலைத் திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாண வர்கள் வெளிநாடுகளுக்கு கல் விச் சுற்றுலா அழைத்துச் செல் லப்படுவார்கள். அக்கச்சிப்பட்டி மாணவ, மாணவிகள் இவ் வாய்பை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகளை இல்லம் தேடிக் கல்வி மய்ய ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் ரகமதுல்லா தெரிவித்தார்.