சென்னை, டிச.16- தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக் குறிப்பு வருமாறு:
தென் தமிழ்நாட்டில் டிச.16 அன்று அநேக இடங்களில், வட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக் குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், நெல்லை, குமரி, மதுரை, விருது நகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிச.17 அன்று தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களில், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சா வூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக் குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக் குறிச்சி மாவட்டங்களுக்கு, புதுச்சேரி பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிச.18 முதல் 20 வரைக்கும் கடலோர தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிச.17ஆம் தேதி, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தி லும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.